திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே காவிரி ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் பாசத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்.
திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றின் இடது கரையில் உள்ள வாத்தலை பகுதியில் அமைந்துள்ள புள்ளம்பாடி தலைப்பு வாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்கால் மண்ணச்சநல்லூர் வழியாக சமயபுரம் , பெருவளநல்லூர், புள்ளம்பாடி, கோவண்டாகுறிச்சி, ஆலம்பாக்கம், அரியலூர் மாவட்டம், பளிங்காநத்தம், ஏலாக்குறிச்சி பகுதியில் உள்ள ஏரிகளில் இந்த நீர் கலக்கிறது. இந்த பாசன வாயக்காலின் மொத்த நீளம் 90.20 கிலோ மீட்டர் தொலைவு ஆகும். இதன் மூலம் திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நேரடி பாசனமாக 8,831 ஏக்கரும், 28 குளங்கள் வாயிலாக 13,283 ஏக்கரும் ஆக மொத்தம் 22,144 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
புள்ளம்பாடி வாய்க்கால் பாசன விவசாயிகள் வழக்கான நெல் பயிர் சாகுபடி காலத்தினை மாற்றி முன் கூட்டியே நெல் சாகுபடி செய்து பயனடியும் வேண்டியும், மேட்டூர் அணை முழு கொள்ளளவை அடைந்துள்ளதால் காவிரி ஆற்றில் 40 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடம் ஆற்றில் 80 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்படவுள்ளது. எனவே ஆற்றரங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், சீ.கதிரவன் ( மண்ணச்சநல்லூர்) ( முசிறி ), அ. சௌந்தரபாண்டியன் ( லால்குடி ) ஸ்டாலின்குமார் ( துறையூர்) ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் ராஜா, புள்ளம்பாடி பாசன விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.