திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. வர்த்தகர் பிரிவு, பட்டியலின அணி சார்பில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத திமுக அரசை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் இன்று அக்கட்சியினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தடையை மீறி முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
மாநில வர்த்தக பிரிவு செயலாளர் முரளிதரன், மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், கோட்ட அமைப்பு செயலாளர் பாலன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் காளீஸ்வரன் சங்கர், ஒண்டிமுத்து, மாவட்ட துணைத் தலைவர்கள் பாலு, சிட்டிபாபு, அழகேசன். கள்ளிக்குடி ராஜேந்திரன், மணிமொழி தங்கராஜ்,மாநில மகளிர் அணி செயலாளர் லீமா சிவகுமார், ,மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் கெளதம் நாகராஜன், மாவட்ட மகளிரணி தலைவர்கள் புவனேஸ்வரி, மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் ஆளும் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தை தொடர்ந்து போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியை பேரிக்காடு வைத்து அடைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென தடையை மீறி கலெக்டர் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல முயன்றனர். அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர் .
இதில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தால் சிறிது நேரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.