திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் 350 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார் – இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் :
நேற்று முதல்வரிடம் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது குறித்த விரிவான திட்ட அறிக்கையை காட்டினோம். டெண்டர் விடுவதற்கான பணிகள் விரைவில் துவங்கும் – 8 அடி உயரத்திற்கு 37 கோடி செலவில் மனலை நிரப்ப உள்ளோம் – இது முதல் கட்டம் 350 கோடி,இரண்டாவது மார்கெட்,பின்னர் வனிக வளாகம் இது போன்று நான்கு கட்டங்களாக இந்த பணிகள் நடைபெற உள்ளது.
இந்த இடத்தில் 280 கடைகள் அமைக்க திட்டம் – 20 ஆயிரம் பேருக்கு இதன் வாயிலாக வேலை வாய்ப்பு ஏற்படுத்த உள்ளோம். மதுரை,திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் இணையும் இடமாக இது அமைகிறது. திண்டுக்கல் கரை முதல் கம்மரசம்பேட்டை இணைப்பிற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது – அதற்கான பணிகள் துவங்கும். மனப்பாறை சிப்காட்டிற்கு ஒரு கூட்டு குடி நீர் செயல்படுத்த முதல்வர் ஒதுக்கி உள்ளார். பெருநகர வளர்ச்சி குழுமத்தில் திருச்சியை எப்படி முதல்வர் விட்டார் என்று தெரியவில்லை – எப்படியும் கேட்டு வாங்கி விடுவேன். முதல்வரிடம் இது குறித்து கலந்து பேசி கண்டிப்பாக திருச்சிக்கு கேட்டு வாங்கி விடுவோம்.
கள்ளிக்குடி மார்க்கெட் விவகாரம் : காட்டுக்குள் வைத்தால் யார் வருவார்கள் ? மக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்தில் மார்கெட் இருந்தால் அனைவருக்கும் வசதியாக இருக்கும். வரி உயர்வு – எடப்பாடி குற்றச்சாட்டு குறித்து : 1987ல் 100 … 200 … 300 1993ல் 100 … 150 …250 என்கிற அளவில் அதிமுக ஆட்சியில் வரியை உயர்த்தினார்கள் – ஆனால் நாம் தற்போது அப்படி எல்லாம் உயர்த்தவில்லை. இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களில் வரி உயர்வு ஏற்றிய பின்னர் தான் தமிழகத்தில் நாம் வரியை உயர்த்தினோம் – மற்ற மாநிலங்களை விட குறைவான வரி தமிழகத்தில் தான்.
மற்ற மாநிலம் நமக்கு முன்னர் வரியை ஏற்றி விட்டனர் – நாம் அதற்கு பின்னர் தான் ஏற்றினோம்,எனவே வேண்டும் என்றே குறை கூறும் அவர்களிடம் நாம் என்ன சொல்ல முடியும். மார்ச் 31 என்பதற்கு பதிலாக பிப்ரவரி 31 என்று தெரியாமல் கூறி விட்டேன் அதை இவ்வளவு பெரிது படுத்துகிறார்கள் – எடப்பாடி கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார்…. வைகையை தர்மாகோலில் மூடிய செல்லூர் ராஜு போன்றவர்கள் ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருப்பார்கள்.