தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது அந்த மாநாட்டின் கோரிக்கை தீர்மானமாக 28-ம் தேதி அகில இந்திய கோரிக்கை நாளாக அறிவித்து நாடு தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தர்ணா போராட்டம் மாவட்ட தலைவர் பால்பாண்டி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த தர்ணா போராட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் பெரியசாமி கலந்துகொண்டு கண்டன விளக்க உரையாற்றினார். தொடர்பு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்
இந்த தர்ணா போராட்டத்தில் கோரிக்கைகளாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரியும், ஓய்வு ஊதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை கலைத்து, தேசிய ஓய்வூதியத்தின் கீழ் உள்ள அனைத்து சந்தாதாரர்களையும் வரையறுக்கப்பட்ட பயனளிப்பு ஓய்வுதிய முறையின் கீழ் கொண்டுவர கோரியும், அகவிலைப்படி ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட கொரோனா தொற்று காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்க கோரியும், சத்துணவு அங்கன்வாடி எம் ஆர் பி செவிலியர்கள் வருவாய் கிராம உதவியாளர்கள் ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரியும், மாநில அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதை கைவிடக் கோரியும், அனைத்து தொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெற கோரியும், புதிய கல்விக் கொள்கையை கைவிட கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கோரிக்கைகள் நிறைவேற வில்லை என்றால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணியாக சென்று கோரிக்கைகள் குறித்து முறையிடுவது போவதாகவும் தெரிவித்தார்.