தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் – இதன் ஒரு பகுதியாக திருச்சி மன்னார்புரம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சூறாவளி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக திருச்சி மாவட்ட அதிமுக கழக மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன், பரஞ்சோதி, குமார் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்:-
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகாலம் சிறந்த முதலமைச்சராக பணியாற்றியவர் எம்.ஜி.ஆர் – அவருக்கு பின்னர் 16 ஆண்டு காலம் தமிழக முதலமைச்சராக அம்மா( ஜெயலலிதா) பொறுப்பேற்று தொலைநோக்குத் திட்டங்களை கொடுத்தார். அவருக்கு பின்னர் 4 ஆண்டு காலம் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக பணியாற்றினார் – ஆக மொத்த 30 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய வரலாறு அதிமுகவுக்கு தான் உண்டு. இந்த இயக்கத்திற்கு திமுகவினர் எண்ணற்ற பிரச்சினைகளை கொடுத்தாலும் அதனை பொறுமையாக ஜெயலலிதா எதிர் கொண்டார். மூன்றாவது முறையும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்ற நிலை இருந்தது ஆனால் பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்தது,ஒரு சின்ன சறுக்காலால் அது நிறைவேறாமல் போனது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் இந்தியாவிலேயே தமிழகம் படித்த பட்டதாரிகள் 52% மாக அதிகரிக்க வழிவகை செய்தார்.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வத்தை மலர்கொத்து கொடுத்து வரவேற்று, வாழ்த்து பெற்ற 20-வது வார்டு அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி ஜவர்கலால் நேரு.
2007ல் காங்கிரஸ்,திமுக கூட்டணி ஆட்சி (காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வந்தது ) அப்போது அது நடக்கவில்லை – ஆனால் உச்சநீதிமன்றம் சென்று 2010ல் நடுவர்மன்ற இறுதித் தீர்ப்புக்கு அரசு ஆணை பெற்று தந்தவர் ஜெயலலிதா.பேரிடர் காலங்களில் உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்கியது அதிமுக ஆட்சி தான். நம் ஆட்சியில் பாரத பிரதமரே கூறினார் : கொரோனோவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார். இப்போ யார் செத்தால் என்ன ? யார் இருந்தால் என்ன ? என்கிற நிலை உள்ளது – இது தான் திமுக ஆட்சி. கொடுக்கிறவர்கள் அதிகமுவினர், எடுக்கின்றவர்கள் திமுகவினர். 505 பொய்யான வாக்குறுதிகளை திமுகவினர் வழங்கி வருகின்றனர் – இவர்களது ஆட்சி காட்சியாக தான் உள்ளது. நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனே முதல் கையெழுத்து நீட் ரத்து என்றார் ஸ்டாலின் ? ஆனால் அவரால் அதை செயல்படுத்த முடியவில்லை,அவரால் செய்யவும் முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.