சசிகலா கடந்த மார்ச் 21-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சி அன்று முதற்கட்ட ஆன்மீக பயணத்தை தஞ்சையில் தொடங்கினார். இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இரண்டாம் கட்ட ஆன்மீக சுற்றுப்பயணத்தை திருச்சியில் துவங்கிய அவர் சிவன் ,பிரம்மா ,விஷ்ணு என மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் சமயபுரம் டோல்கேட் அருகிலுள்ள உத்தமர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள திருக்கடையூர் கோவிலுக்கு செல்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த சசிகலா விடம் நிருபர்கள் பேட்டி எடுத்த பொழுது அவர் கூறியதாவது:- அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணி கட்சியுடனா? என்ற கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள்” என்று வி.கே. சசிகலா பதில் கூறினார். மேலும் உங்களை வரவேற்க வரும் அமமுகவினரை டிடிவி தினகரன் கட்சியை விட்டு நீக்குகிறாரா?’ என்ற கேள்விக்கு, நேரடியாக பதில் சொல்ல மறுப்பு தெரிவித்து. “கோயிலுக்கு செல்கிறேன். இதுகுறித்து அப்புறம் பதிலளிக்கிறேன்” என்று கூறிவிட்டு சென்றார்.