திருச்சி கேகேநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட TVS டோல்கேட் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நடந்து சென்ற கறிகடை ஊழியர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை ( மதிப்பு ரூ 7000 / – ) பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து , வழக்கின் சம்மந்தப்பட்ட குற்றவாளி ஜாக்கி ( எ ) பிரசாத் வயது 23 என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் குற்றவாளி மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது .

 

இதேபோல் திருச்சி கேகேநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஜாமியான் பள்ளி அருகில் , இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் செல்போனை ( மதிப்பு ரூ 7000 / – ) பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து , வழக்கின் சம்மந்தப்பட்ட குற்றவாளி ஜெயசீலன் வயது 19 என்பவரை கைது செய்து செய்துள்ளனர். மேலும் விசாரணையில் எதிரி மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்கு உட்பட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது . எனவே , ரவுடிளான ஜாக்கி ( எ ) பிரசாத் மற்றும் ஜெயசீலன் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் , பொதுமக்களை அச்சுறுத்தி கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறிப்பவர்கள் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததால் , மேற்கண்ட குற்றவாளிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கேகேநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து , திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார் . அதனை தொடர்ந்து ரவுடிகள் ஜாக்கி ( எ ) பிரசாத் மற்றும் ஜெயசீலன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *