கடந்த சில மாதங்களாகத் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு வெறிநாய் ஒன்று 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களை கடித்து குதறியது இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிப்பது தொடர்கதையாகி வந்தது. இதனால் தெருநாய்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடமும் மாநகராட்சி நிர்வாகத்திடமும் பொதுமக்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் திருச்சி வயலூர் மெயின் ரோடு ராமலிங்க நகர் பிரதான சாலை பகுதியில் உள்ள பூங்கா எதிரே இன்று காலை வெறி பிடித்த நாய் ஒன்று அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் அப்பொழுது நாய்களை கடித்து குதறியது இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் நாயை பிடித்து அதன் வாய்யை ஒயரால் கட்டி வைத்தனர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற 24-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி காரை விட்டு கீழே இறங்கி வந்து உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் வெறி நாயை அப்புறப்படுத்த உத்தரவிட்டார் அதனை தொடர்ந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரி வெறிபிடித்த நாயை பத்திரமாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் தொடர்ந்து இந்த ராமலிங்க நகர் பகுதியில் பள்ளி கல்லூரி மற்றும் வணிக வளாகங்கள் அதிக அளவில் உள்ளன மேலும் பூங்காக்கள் உள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வயதானவர்கள் வாகன ஓட்டிகள் என ஏராளமானோர் இந்த வழியாக வந்து சென்று கொண்டிருக்கின்றனர் இந்நிலையில் இதுபோன்ற வெறிபிடித்த நாய்களால் அடிக்கடி இப்பகுதியில் பெருந்தொல்லைகள் ஏற்படுகிறது உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் இதுபோன்ற நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்