தமிழ்நாடு அரசு மயக்கவியல் நுட்புநர்கள் நலச் சங்கத்தின் துவக்க விழா திருச்சியில் நடைபெற்றது . இந்த துவக்க விழாவிற்கு சங்கத் தலைவர் லெனின் பிரைட் தலைமை தாங்கினார் அம்பிகா வரவேற்புரை நிகழ்த்தினார். சங்கத்தின் நோக்கத்தை பொதுசெயலாளர் செல்வராஜ் விளக்கினார் சாந்தக்குமார், மாநிலப் பொருளாளர் மஹாலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் இரவீந்திரநாத் சங்கத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் தற்பொழுது வழங்கப்படும் அடிப்படை ஊதியம் ரூ 1650 என்பதை, ரூ 2400 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பணியில் சேர்ந்த 5 ஆண்டு நிறைவில் கிரேடு 1 என்ற பதவி உயர்வை வழங்கிட வேண்டும்.கிரேடு 1 பதவிகளை அதிகப்படுத்த வேண்டும். மயக்கவியல் நுட்புநர்களுக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். அறுவை அரங்கம் உள்ள மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட மருத்துவமனைகள், தாலுக்கா மருத்துவமனைகள் உட்பட அனைத்து மருத்துவமனைகளிலும்
புதிய பணியிடங்களை ஏற்படுத்தி வேலைவாய்ப்பின்றி உள்ள மயக்கவியல் நுட்புநர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும். 12 மணி நேர வேலை என்பதை 8 மணி நேர வேலையாக குறைக்க வேண்டும். இட மாறுதல் கவுன்சிலிங் நடத்திட வேண்டும். மயக்கவியல் நுட்புனர்களுக்கான பணி என்ன என்ன என்பதை தமிழ்நாடு அரசு வரையறுத்து அரசாணை வெளியிட வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.