தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மத்திய மாநில அரசை வலியுறுத்தி மாபெரும் அறவழிப் போராட்டம் அண்ணா சிலை அருகே இன்று நடைபெற்றது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் பெயரை அறிவிக்க வேண்டும். பெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட முத்தரையர் சமூகத்திற்கு தமிழக அமைச்சர் அவையில் மூன்று இடங்களை வழங்க வேண்டும். பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் அரசு சதய விழா அன்று முத்தரையர் மக்களை கௌரவிக்கும் வகையில் முதலமைச்சர் கலந்து கொண்டு திருச்சியில் நடைபெறும் சதய விழாவில் மன்னரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும்,

பெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட முத்தரையர் சமூகத்திற்கு தமிழக அமைச்சர் அவையில் மூன்று இடங்களை வழங்க வேண்டும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பேரூர் பெரும்பிடுக முத்திரையர் திருவுருவ சிலை அமைக்க வேண்டும். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா அன்று முத்தரையர் மக்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்து மன்னரை தெய்வ தரிசனம் செய்வதற்கு ஏதுவாக அன்று அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும். தமிழுக்கு முதன் முதலில் நெய் கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயரை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு பெயர் சூட்ட வேண்டும்.

தமிழர்களின் அடையாளமாக இருக்கக்கூடிய உலகில் முதன் முதலில் அணை கட்டிய கரிகால பெருவளத்தானுக்கு அரசு சார்பில் அரசு விழா அறிவித்து கௌரவம் எடுக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் அறவழிப் போராட்டம் திருச்சி அண்ணா சிலை அருகே நடைபெற்றது. தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ஆர் விஸ்வநாதன் தலைமையில் இன்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் பிரபு, பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்