3வது மாநில அளவிலான மியூசிக்கல்ஸ் ஸ்கேட்டிங் மற்றும் ஸ்கேட்டிங் போட்டிகள் இன்று திருச்சி கருமண்டபத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகளை எஸ்.ஏ.எஸ்.கல்வி குழுமத்தின் இயக்குனர் முனைவர் செபாஸ்டின் துவக்கி வைத்தார்.சிறப்பு விருந்தினர்களாக ஏசிஎஸ் கல்வி குழுமத்தின் செயலாளர் மெட்டில்டா, ஒருங்கிணைப்பாளர் யூஜின், தென்னக ரயில்வே மண்டல தலைவர் பவுல்ரெக்ஸ், உதவி பொது மேலாளர் ரகுபதி, மியூசிக்கல் சேர்ஸ் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் பயிற்சியாளர் கந்தமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டிகள் 8, 11, 15, 17, 19வயதின்கீழ் மற்றும் எடையின் அடிப்படையில் நடைபெற்றது. போட்டிகள் மியூசிக்கல் சேர், ஸ்கேட்டிங், ஃப்ரீ ஸ்டைல், ஸ்பீடு ஸ்கேட்டிங். ஸ்கேட்டிங் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் நடைபெற்றது. வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தேசிய பயிற்சியாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் நடுவராக போட்டிகளை நடத்தினார்.
போட்டிகளில் திருச்சி, நாமக்கல், கரூர், தென்காசி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் 250க்கு மேற்பட்டோர்பங்கேற்றனர். மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகள் பிப்ரவரி மாதம் ஆக்ராவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான மியூசிக்கல் சேர் ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.