கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பத்திரிகையாளர்கள் செய்திகளை சேகரித்து வருகின்றனர். மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு இணைப்பு பாலமாக செயல்படுகின்றனர். இவர்களின் பணியை ஊக்குவிக்கும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார், பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.. இதே போல் கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிக்கையாளர் குடும்பங்களுக்கு 5லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக இழப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் அறிவித்துள்ளார்..அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வார இதழ்களில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் அரசால் அங்கீரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..