ரயில்வே தனியார் அமைப்பை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பொன்மலையில் எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் பணிமனை முன்பு நடைபெற்றது.இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை மாற்றி 2004க்கு முந்தைய பழைய பென்சன் திட்டத்தை வழங்க வேண்டும். ரெயில் நிலையங்கள், விரைவு ரெயில்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. லட்சக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ண விரபோராட்டம் நடத்தினர். உண்ணாவிரத போராட்டத்தில் எஸ். ஆர்.எம்.ஏ.ரெயில்வே ஊழியர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து திருச்சி டி.ஆர்.எம்.அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திலும் சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் வீர சேகரன் மற்றும் ரெயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரயில்வே தொழிலாளர்களை தொடர்ந்து புறக்கணித்தால் இந்தியாவில் எந்த ரெயிலும் ஓடாத அளவில் அகில இந்திய அளவில் பெரிய போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்தார்.இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 1000 -க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.