திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தி இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன் பறிப்பு மற்றும் செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , துரிதமாக செயல்பட்டு , திருச்சி மாநகரத்தில் உள்ள CCTV பதிவுகளை ஆய்வு செய்து , சந்தேக நபர்களை விசாரணை செய்தும் , தீவிர வாகன தணிக்கை செய்து , செல்போன் பறிப்பு வழக்குகளில் தொடர்புடைய 98 குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு , குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

மேலும் செல்போன் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 80 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது . மேலும் பொதுமக்களை அச்சுறுத்தி செல்போனை பறிப்பு சம்பவங்களில் தொடர்ந்து ஈடுப்பட்ட 14 குற்றவாளிகளை காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் . திருச்சி மாநகரத்தில் , சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும் , சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் , கெட்டநடத்தைக்காரர்கள் , செல்போன் பறிப்பு , செல்போன் திருட்டு மற்றும் செல்போன் கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து , அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *