Rotary international District 3000 மற்றும் rotary club of Trichy legends சார்பாக திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கார் பேரணி இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை ரோட்டரி 3000: மாவட்ட கவர்னர் கார்த்திக் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியானது திருச்சியில் இருந்து புறப்பட்டு கரூர் திருப்பூர் கோயம்புத்தூர் சேலம் பாண்டிச்சேரி செங்கல்பட்டு வழியாக சென்னையில் நிறைவடைகிறது..

இந்த விழிப்புணர்வு பேரணியின் நோக்கமாக மார்பக புற்றுநோயை தடுக்கும் குறிப்புகள் மற்றும் மார்பக புற்றுநோய் குறித்த பொதுவான சந்தேகங்கள் அடங்கிய கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கியும், அதேபோல் புற்றுநோய் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் மற்றும் சிகிச்சை முறைகளை கருத்தில் கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதற்காக இந்த மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணிக்கான ஏற்பாடுகளை ரோட்டரி 3000 பெண்கள் மற்றும் குடும்ப நலன் மாவட்ட செயலாளர் நீலாவதி கோபாலகிருஷ்ணன் மற்றும் துணைச் செயலாளர் ஜெயந்தி ராஜ்குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் செய்து இருந்தனர்.
