லக்ஷணா ஃபேஷன் நிறுவனத்தின் மணப்பெண் அலங்காரம், டைலரிங் கோர்ஸ், ஃபேஷன் ஸ்கோர்ஸ் ஆகியவற்றை கடந்த 19 ஆண்டுகளாக நடத்தி வந்த லக்ஷனா பேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் அனிதா டேவிட் அவர்களின் அடுத்த மைல் கல்லாக லக்ஷணா யோகா ஸ்டுடியோ திறப்பு விழா திருச்சி தில்லை நகர் 7வது கிராஸ் பகுதியில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் வசந்தி கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். விவேகானந்தா யோக மையத்தின் டாக்டர் ஸ்ரீதர் டாக்டர் சந்தானகிருஷ்ணன், திருச்சி மாவட்ட மையநுழக வாசகர் வட்டம் தலைவர் தமிழ் செம்மல் கோவிந்தராஜ், வழக்கறிஞர் சத்தியபாமா, ஆல்பா கல்வி நிறுவனங்களின் முதல்வர் ராதிகா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்கள்.
அதனைத் தொடர்ந்து லஷணா யோகா மையத்தின் உரிமையாளர் அனிதா டேவிட் பேசுகையில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என தனி தனி பிரிவுகளாக இந்த யோகா மையத்தில் வகுப்புகள் நடத்துகிறோம் .சேவை நோக்கில் குறைந்த கட்டணமே வசூலிக்கிறோம்.
மிகச் சிறப்பு வாய்ந்த விவேகானந்தா யோகா மையத்தின் மாஸ்டர்கள் டாக்டர் ஸ்ரீதர் மற்றும் ஸ்ரீ சந்தானகிருஷ்ணன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். ரெகுலர் கிளாசஸ் எனப்படும் சராசரி வகுப்புகள் நீங்கலாக மூட்டு வலி, முதுகு தண்டுவட வலி, சைனஸ் பிராப்ளம் ஆகியவற்றிற்கு சிகிச்சை முறை யோகாவும் கற்றுத் தருகிறோம் மேலும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக கூடிய விரைவில் திருச்சி மாவட்டத்தில் மாரத்தான் ஒன்றை நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.