திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற வனவிலங்குகளால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுத்தல் தொடர்பாக, விவசாயிகள், மக்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் பங்கேற்று விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து கிராம வனக் குழுவினருக்கு சுழல் நிதிக் கடனுதவிகளை வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்கள் அசோக் உப்ரிதி, சேகர்குமார்நீரஜ், தமிழ்நாடு வனத்தோட்டக் கழக நிர்வாக இயக்குநர் யோகேஷ்சிங், கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் முனைவர் நாகநாதன்,(வனப்பாதுகாப்பு சட்டம்) திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலர் சதிஷ், மாவட்ட வன அலுவலர்கள் திரு.கிரன்,(திருச்சி) கணேசன்,(புதுக்கோட்டை) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், முத்துராஜா (புதுக்கோட்டை), கண்ணன்(ஜெயங்கொண்டம்), சின்னப்பா (அரியலூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்கு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
குரங்கு,மயில் காட்டெருமை மற்றும் முதலை போன்ற விலங்குகளால் விவசாயிகளுக்கு பல வகையில் பிரச்சனை ஏற்படுகிறது – சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இதன் மீது ஒரு மாத காலத்திற்குள்ளாக நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் அரசின் சார்பில் கொடுக்கப்படும் இழப்பீட்டை அதிகரித்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். அவற்றை பரிசீலித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈஷா யோகா எங்களுக்கு கொடுத்த அறிக்கையின்படி ஒரு சென்ட் நிலம் கூட ஆக்கிரமிப்பு இல்லை என்று தெரிய வருகிறது – சர்வே குழு மற்றும் அதிகாதிகள் கொண்ட குழு மீண்டும் ஈசா யோகா இருக்கும் இடத்தை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.
காருண்யா பல்கலைக்கழகமும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் வந்துள்ளது – கண்டிப்பாக முறைப்படி அதனையும் ஆய்வு செய்வோம். தமிழக நிலப்பரப்பில் 23.98% மட்டும் தான் வனப்பகுதியாக உள்ளது, இதனை 33 சதவீதமாக அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்திற்கு 2.65 கோடி மர நாத்துக்கள் போட வேண்டும் தமிழ்நாடு கிரீன் மிஷன் பிரைவேட்டிங் கம்பெனி என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், சமயபுரத்தை அடுத்த எம்.ஆர் பாளையத்தில் விலங்குகள் சரணாலயம்( Zoo) அடுத்த ஓராண்டுக்குள் கொண்டு புறப்படும் என தெரிவித்தார்.