இந்திய மனநல சங்கத்தின் தென்மண்டல கிளை சார்பில் வருகிற அக்டோபர் 22 முதல் 24 ம்தேதி வரை 3 நாட்களுக்கு 54வது ஆண்டு தேசிய அளவிலான கருத்தரங்கம் மதுரையில் நடைபெறுகிறது. இதற்கான போஸ்டரை தென்மண்டல மனநலமருத்துவ சங்க தலைவர் மருத்துவர் .ராமகிருஷ்ணன், ஒருங்கிணைப்பு செயலாளர் மருத்துவர் .அருண்குமார் ஆகியோர் வெளியிட்டனர்.
அதனைத் தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது Dr.ராமகிருஷ்ணன் பேசுகையில் :-
இந்தியா முழுவதுமிருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். பேரிடரில் மனநலம் என்ற தலைப்பில் இந்த ஆண்டு கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது. உலக மனநல தினம் அக்டோபர் மாதம் 10ம் தேதியும், மனநல மாதமாக மாதம் முழுவதும் கொண்டாடப்படும் பட்சத்தில் நடப்பாண்டு ‘சமமில்லாத உலகத்தில் மன நலத்தை பேணிகாப்பது’ குறித்த கருவாக கொண்டு விவாதிக்கப்பட உள்ளது என்றார்.
மேலும் இந்தியாவில் 15 சதவீதத்துக்கு மேல் உள்ளவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், 6 சதவீதம் பேர் தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமானால் மருத்துவர்கள் குறைபாடு உள்ளது, இந்தியாவில் ஒரு லட்சம் மனநோய் மருத்துவர்களுக்கு இருக்கவேண்டிய இடத்தில் 12000 பேர் மட்டுமே தற்போது உள்ளனர்.
மேலும் 45விநாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர், 15- 35 வயதிற்குள் 70 சதவீதமான தற்கொலை நிகழ்கிறது, தற்கொலை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க முடிவதில்லை என்றும், வாலிபர்களிடம் குழந்தைகளிடம் தற்போது மனநோய் அதிகரித்துள்ளது, ஆன்லைன் வகுப்புகள்; மற்றும் வீட்டுக்குள்ளே இருப்பதனால், வன்முறைகள் மற்றும் குடும்ப சண்டை சச்சரவுகள், பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பணம் இல்லாத காரணத்தாலும் மன அழுத்தம் அதிகரித்து காணப்படுகிறது.
கொரோனா காலங்களில் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டு இருந்ததால், அதன்மூலம் மதுபானத்தை படிப்படியாக குறைத்துவிடலாம் என்று எண்ணியநிலையில் மீண்டும் டாஸ்மாக் திறக்கப்பட்டதல்… மீண்டும் மக்களிடம் மதுபானம் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதுமட்டுமன்றி கஞ்சா மற்றும் எளிய முறையிலான போதை ஊசி மற்றும் மருந்துகள் போதைப்பொருட்கள் பயன்பாடும் தற்போது அதிகரித்து வருவதுடன், இதன் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தொடர்ந்து விழிப்புணர்வு அளித்தால் மட்டுமே இதனை கட்டுபடுத்த முடியும் என்றார்.