திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட கலெக்டர் பிரத்திக் தயாள் யிடம்அகில பாரத பார்க்கவகுல சங்கத்தின் நிறுவன தலைவர் திருமலை ரவி மற்றும் முதுவத்தூர் கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர் அந்த மனுவில் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முதுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ரகுபதி என்பவரை விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கிகொலைவெறி தாக்கி அவர் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வேண்டும். இதே போன்று லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி ஒன்றியம் சிறுகளப்பூர் கிராமத்தை சேர்ந்த செந்தமிழ் செல்வி என்ற பார்க்கவ குல பெண் பாலியல் கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. எனவே மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் ஆட்சி நடக்கும் நிலையில் இது போன்ற சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சக்திகளை அரசும் காவல்துறையும் இரும்பு கரம் கொண்டு அடக்கி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் திருமலை ரவி கூறியுள்ளரர்.இவருடன் முதுவத்தூர் கிராம மக்கள் ஏராளமானவர்களும் திரண்டு வந்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்