தமிழக விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக பாரத பிரதமர் மோடி அவர்கள் கடந்த 2014, 2019ஆம் ஆண்டுகளில் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 22.05.2024 முதல் 30.05.2024 வரை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பாகவோ, அல்லது பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் முன்பாகவோ,

அல்லது சாஸ்திரி பவன் முன்பாகவோ, அல்லது தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் அழுவலகமான தலைமை செயலகம் முன்பாகவோ காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்காக கடந்த 22 ஆம் தேதி திருச்சியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் மூலமாக சென்னை செல்ல இருந்த நிலையில் காவல் துறையினரால் அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள மாநில தலைவர் அய்யாக்கண்ணுவை வீட்டுக்காவலில் வைத்தனர்.

இந்நிலையில் இன்று காலை காவல்துறையினரால் தேசிய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உட்பட 7 விவசாயிகள் கைது செய்யப்பட்டு அனைவரும் திருச்சி உறையூர் காவேரி திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

இதனைக் கண்டித்து திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை எதிரே உள்ள செல்போன் டவர் மீது தனபால் தமிழ்ச்செல்வன் ராமச்சந்திரன் ஆகிய மூன்று பேர் ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர் மேலும் மாநில தலைவர் ஐயா கண்ணு உள்பட மற்ற விவசாயிகளை விடுதலை செய்யக்கோரி 10க்கம்மேற்பட்ட விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனை அறிந்து வந்த உறையூர் காவல்துறையினர் விவசாயிகளை உடனடியாக கைது செய்து போக்குவரத்தை சீர்படுத்தினர் மேலும் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தும் விவசாயிகளை கீழே இறக்குவதற்காக

திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விவசாயிகளை கீழே இறக்க முற்பட்ட தீயணைப்புத் துறையினருக்கு விவசாயிகள் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *