கோரையாற்றின் கரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரினை அகற்றிடவும், கரைகளை மேலும் பலப்படுத்தி மழைநீர் உள்ளே வராத அளவிற்கு நடவடிக்கை எடுத்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் இப்பகுதி மக்களுக்கு உணவினையும் வழங்கினார். தொடர்ந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை கண்காணிப்புடன் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், நீர்வள ஆதாரத் துறை கண்காணிப்பு மற்றும் செயற் பொறியாளர்கள்,
மாநகராட்சி அலுவலர்கள் ,வருவாய்த் துறை அலுவலர்கள், முன்னாள் துணை மேயர் திரு.மு. அன்பழகன் மாவட்டப் பிரமுகர் வைரமணி, மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.