தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மற்றும் சமயபுரம் கோயிலில் புதிய அர்ச்சகர் பயிற்சி பள்ளியையும் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு சேர்க்கைக்கான அனுமதி ஆணைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்த 40 மாணவ, மாணவர்களுக்கு இன்று முதல் நாள் ஆசிரியர் அர்ச்சகர் சுந்தர் பட்டர் பாடங்களை நடத்தினார் . இந்த பயிற்சி பள்ளியில் தமிழ் மொழி பாடமாக செய்யுள், உரைநடை பகுதி, திருக்குறள், நீதி நூல்கள், 4000 திவ்ய பந்தம், வேதம் மற்றும் ஆகம பயிற்சி பாஞ்சராத்ர ஆகமம், ஜோதிடம் தமிழ் மற்றும் செய்முறைப் பயிற்சி ஆகியவை ஓராண்டு பயிற்சியாக வழங்கப்பட உள்ளது.
மேலும் இந்த பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு பயிற்சி பள்ளி வளாகத்தில் வகுப்பறை தாங்கும் வசதியுடன் கூடிய படுக்கை அறைகள் மற்றும் சமையல் கூடம் கழிவறை வசதிகள் ஓய்வு கூடம் ஆகியவை கூடுதல் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஊக்கத்தொகையாக மாதம் ஒருவருக்கு 3000 வழங்கப்படுகிறது. அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவிகள் தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி , ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, மாமன்ற உறுப்பினர் ஆண்டாள் ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.