மனித குலத்தைக் காக்க மிக வேகமாகவும் அதோடு முழுமையாக குணமடைய வேண்டும் என்ற சிறப்பான நோக்கத்தோடும் செயல்பட்டு வரும் திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையானது தனது அங்கமாகிய சேவை தொண்டு நிறுவனம் ஆகிய தனபாக்கியம் கணேசன் பொன் மெமோரியல் டிரஸ்ட் உடன் சேர்ந்து பல ஏழைகளுக்கு பல நல்ல இலவச மருத்துவ சேவைகள் செய்து வருகிறது.
மேலும் ஒரு படி சேர்த்து தொலைநோக்கு பார்வையோடு மருத்துவமனைக்கு வந்து செல்ல முடியாமல் கஷ்டப்படும் ஏழைகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த இலவச ஆம்புலன்ஸ் நன்கொடையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பௌத்த சங்கத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஷித் காம்ளே மற்றும் ரோஸன்னா காம்ளே ஆகியோர் வழங்கினர்.
இந்த இலவச ஆம்புலன்ஸ் அதிநவீன சிறப்புகளாக முதலீடு செய்யும் வசதி ஆக்சிஜன் வசதியோடு செயல்பட்டு வருகிறது. இந்த நவீன வசதி கொண்ட இலவச ஆம்புலன்ஸ் சேவையை இருதய நோய் நிபுணர் மருத்துவர் பாலசுப்ரமணியன் மற்றும் பெங்களூரு பௌத்த சங்கத்தை சேர்ந்த ரவி கீர்த்தி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். அருகில் திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகிகள் மருத்துவர் கோவிந்தராஜ் மற்றும் மருத்துவர் சசி பிரியா கோவிந்தராஜ் ஆகியோர் இருந்தனர்.
மேலும் இந்த நவீன வசதி கொண்ட இலவச ஆம்புலன்ஸ் வசதியை பெற பொதுமக்கள் 73 73 73 10 08 அலைபேசியை தொடர்பு கொண்டு இந்த 24 மணி நேர இலவச சேவை பெற்றுக்கொள்ளலாம் என ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.