Month: December 2022

திருச்சி இராஜம் கிருஷ்ண மூர்த்தி பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள இராஜம் கிருஷ்ணமூர்த்தி பப்ளிக் பள்ளியில் செயற்கை நுண்ணறிவியல், இயந்திரவியல் குருகுலம் முதல் குளோபல் புதுமை மற்றும் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியை சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மாவட்ட ஆர்டிஓ தவச்செல்வம் மற்றும் அறிவியல்…

இந்தியாவில் மிக மிக குறைவாக வரி வசூல் செய்யும் மாநிலம் தமிழகம் – அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் திருச்சி, கரூர்,அரியலூர் பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் தமிழக…

திருட வந்த வாலிபரை அடித்து படுகொலை – வடமாநில வாலிபர்கள் 4-பேர் கைது.

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரில் இயங்கி வந்த ஆஷா மர அறுவை மற்றும் விற்பனை கடையில் மர்மநபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து அரவை மில்லில் பணியில் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்களிடம்…

திருச்சியில் ரூபாய் 11,33, லட்சம் மதிப்பீட்டில் 52 மாற்றுத் திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

திருச்சி மாவட்டத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளி தின விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 99,999 மதிப்பீட்டில் பேட்டரிகள் இயங்கும்…

திருச்சியில் தீ விபத்து – பல லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் பொருட்கள் எரிந்து நாசம்….

திருச்சி பீமா நகர் மாசிங் பேட்டை மெயின் ரோட்டில் உள்ள காம்ப்ளக்ஸ் ஜன்னலில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது இதனைக் கண்ட பக்கத்து கடைக்காரர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர்…

தனியார் மயத்தை கண்டித்து திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு DYFI அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

மாநகராட்சிகளில் பணிபுரியும்தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள் , மேற்பார்வையாளர்கள் போன்ற இதரபணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விடுவதை கைவிட வேண்டும். மாநகராட்சிகளில் நீண்ட காலமாக பணிபுரிபவர்களை உடனடியாக பணி நிரந்தர படுத்த வேண்டும். தனியாரிடம் கொடுத்து 69 சதவீத இடஒதுக்கீடு சமூக நீதியை…

திருச்சி பேரா சிரியரிடம் ரூ.23 லட்சம் ஆன்லைன் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

திருச்சி முசிறி திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் நவாஸ் (வயது 47). கணினி அறிவியலில் பி.எச்.டி. முடித்துள்ள இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் பணியாற்றி…

திருச்சி மாநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 15,151 பேர் அதிரடி கைது.

திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 15,151 நபர்கள் மீது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . பொதுமக்களுக்கும் , பொது…

மார்பக புற்றுநோய் – பிங்க் கலர் குடைகளை பிடித்து விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற பெண்கள்.

நாடு முழுவதும் மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான விழிப்புணர்வு முகாம்கள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக 3-ம் நாளான இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இந்தியா டோன்ஸ் பிங்க் என்ற அமைப்பு சார்பில் ரோட்டரி சங்கம், சர்வதேச விமான…

முதல்வரை ஆபாசமாக பேசிய விவகாரம் – திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் உட்பட பாஜகவினர் 9-பேர் கைது.

திருச்சியில் போலீசாரின் தடையை மீறிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக வினர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தகாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசியதாக அதற்கான வீடியோ ஆதாரத்துடன், திமுகவினர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். திருச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு…

தமிழக முதல்வரை ஆபாசமாக பேசிய பாஜக நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி திமுகவினர் சாலை மறியல்.

திருச்சி புத்தூர் பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நடன கேளிக்கை விடுதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர் இதனை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு…

திருச்சி ஊராட்சி து.தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைவர், உறுப்பினர்கள் கலெக்டரிடம் புகார்.

திருச்சி செவந்தலிங்கபுரம் ஊராட்சி தலைவர் மற்றும் 6- உறுப்பினர்கள் இன்று காலை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் புகார் மனு அளித்தனர் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் செவந்தலிங்கபுரம் ஊராட்சி தலைவராக இருப்பவர்…