இன்று 2023ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்ததையொட்டி காலை முதலே திருச்சியில் உள்ள மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோயில். உறையூர் வெக்காளியம்மன் கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் மற்றும் பல்வேறு கோவில்கள் மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வருடம் நல்ல வருடமாக அமைய வேண்டும் மக்கள் நோய் நொடியின்றி வாழவும் செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் புத்தாடை அணிந்து பொதுமக்கள் குடும்பத்துடன் ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.