Month: September 2023

அதிமுகவின் 2.1/2 கோடி தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கிறார்கள் – திருச்சியில் முன்னாள் எம்பி அன்வர் ராஜா பேச்சு.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் அருள் ஆசியுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115…

திருச்சி 38வது வார்டு பகுதியில் சாலையை சீரமைக்க கோரி திமுக கவுன்சிலரை பொதுமக்கள் முற்றுகை யிட்டதால் பரபரப்பு

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 38 வது வார்டு காட்டூர் அண்ணா நகர் ராஜவீதி பகுதியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மேலும் இந்த ராஜவீதியானது காட்டூர்-காமராஜர்நகர் பகுதியை இணைக்கும் பிரதான வீதியாக உள்ளது. இங்கு பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக…

திருச்சி வெடி கடையில் போலீஸ் எஸ்பி திடீர் ஆய்வு – உரிமையாளர் கைது.

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அருகே அகிலாண்டபுரத்தில் கடந்த மாதம் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கிடையே முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இந்த வழக்கில் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த…

கர்நாடக அரசை கண்டித்து தமிழக முதல்வர் உண்ணா விரதம் இருக்க வேண்டும் விவசாய சங்க தலைவர் அய்யாக் கண்ணு வலியுறுத்தல்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  45 வது நாளான இன்று விவசாயிகள் மத்திய அரசு…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1000/-க்கான வங்கி அட்டைகளை வழங்கிய அமைச்சர்கள்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிகல்வித். துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்…

திருச்சியில் 44வது நாளாக விவசாயிகள் போராட்டம் கண்டு கொள்ளாத அமைச்சர்கள் – விவசாய சங்க தலைவர் அய்யாக் கண்ணு வேதனை.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  44 வது நாளான இன்று மண் உண்ணும் போராட்டத்தில் …

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், திருச்சி, சிந்தாமணி அருகே உள்ள அண்ணா சிலைக்கு, அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் எம்பி ரத்தினவேல், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்,…

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா – திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக கழக முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில்…

ஏர்போர்ட் வந்த பயணியின் ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்திய 260 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்பொழுது பயணி ஒருவர் தனது ஆசனவாயில் மறைத்து வைத்து…

முதல்வருக்கு பதிவு தபால் மூலம் கோரிக்கைகள் அனுப்பிய தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்ட அமைப்பினர்.

தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 150 க்கு மேற்பட்ட தொழில் சங்கங்கள் இணைந்து தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முறையிட்டு வருகிறது அந்த வகையில் இன்று காலை தலைமை தபால் நிலையத்தில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள்…

அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கை:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரையில் நடைபெற்ற வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில்…

நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச் செயினை பறிப்பு – மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள சரடமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (38). இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். ராமச்சந்திரன் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு…

திருச்சி ஜி.எச் முன்பு இறந்த கிடந்த மூதாட்டி போலீசார் விசாரணை.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு உள்ள நடைபாதையில் அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக ஜி.எச் காவல் நிலைய போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இட வந்த போலீசார் இறந்த கிடந்த மூதாட்டியின் உடலை…

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பாக 2ம் நாள் தொடர் மறியல் போராட்டம் ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக திருவரங்கம் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டது . இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக விலைவாசி…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்ட பெண்களால் திருச்சியில் பரபரப்பு.

தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றது முதல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார் அதிலும் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். தற்போது கலைஞர் மகளிர் உரிமைத்…