Month: February 2024

விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை அனைத்து அரசியல் கட்சி தேர்தல் அறிக்கை குழுவிடம் வழங்க உள்ளதாக பாரதிய கிசான் சங்கத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு பாரதிய கிசான் சங்கத்தின் மாநில தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னதாக மாநில நிர்வாகி வைத்தியநாதன் வரவேற்பு உரையாற்றினார். அதனைத்…

வாகனத்தில் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மேலசிந்தாமணி இந்திராகாந்தி கல்லூரி மைதானத்தில் இன்று விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்க பின்பற்ற வேண்டிய சாலை பாதுகாப்பு விதிமுறைகளை வலியுறுத்தும் வகையிலும், வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து பயணம்…

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1-கோடி ரூபாய் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஐ.ஜி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோர் புகார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், பெருங்குடி வலையம்பட்டியை சேர்ந்த முத்துகுமார் என்பவர் இன்று காலை திருச்சி சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- அரசு வேலைக்காக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தேன். அப்போது…

திருச்சி ஏர்போர்ட் வந்த பயணி ஷூ-வில் மறைத்து கடத்திய 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்கள் கடத்தி வருவது தொடர்கதையாகி இருந்து வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலம்…

தமிழக அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய கோரி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் திருச்சியில் போராட்டம்.

நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்தி தமிழக அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, போக்குவரத்துக் கழகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வு மற்றும் ஓய்வு பலன்களை வழங்கிட வேண்டும், 2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன்…

திருச்சியில் உள்ள 13 ஏரிகளை பாதுகாக்க கோரி தண்ணீர் அருந்தா தொடர் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் பரபரப்பு.

திருச்சியில் NH 67 தேசிய அரை வட்ட சுற்றுச்சாலைக்காக காவிரி பாசன 13 ஏரிகள் அழிக்கப்படுவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு விசாரணை நடத்த வேண்டும். ஏரிகளில் மண்ணைக் கொட்டி சாலை அமைக்காமல் உயர்மட்ட பாலங்கள் அமைக்க வேண்டும். கார்ப்பரேட்டுக்கு துணை…

மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் வருகிற 16-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் தொடர்பான வாயிற் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் மீதான GST வரியை நீக்க வேண்டும், தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்ப பெற வேண்டும், குறித்த கால வேலை நியமனம் (பிக்சட் டெர்ம் எம்பிளாய்மெண்ட்) முறையை ரத்து செய்ய வேண்டும்,…

மத்திய அரசை கண்டித்து செல்போன் டவர் மீது ஏறியும், மண்டை ஓடுகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் திருச்சியில் பரபரப்பு.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை வேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு மத்திய பிஜேபி அரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், மத்திய பிஜேபி அரசின்…

வருகிற 25-ம் தேதிக்குள் ஆ.ராசா எம்.பி வருத்தம் தெரிவிக்க வேண்டும் கெடு விதித்த தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தினர்.

இந்திய சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை குறித்து திமுக முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்ற திமுக உறுப்பினரும் ஆ.ராசா தவறான தகவலை பரப்புவதாக தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கண்டனம் தெரிவித்தனர். மேலும்…

திருச்சி தேசிய கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர்.

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தேசிய கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளின் கல்லூரி கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் உயர்த்தி உள்ளதாகவும். இதனால் கல்லூரி மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் இங்கு ஏராளமானோர்…

கட்சித் தலைமையும் கூட்டணி தலைமையும் ஆணையிட்டால் திருச்சியில் போட்டியிடுவேன் – ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ பேட்டி:-

திருச்சி மத்திய மண்டல ம.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் நிதி வழங்கும் விழா திருச்சி சண்முகா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாவட்டச்…

குப்பை மேட்டை “நந்த வனமாக்கிய” கவுன்சிலர் சுரேஷ், தூய்மை பணியா ளர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்.

பொதுமக்கள் குப்பைகளை தெருவோரம் வீசி செல்வதை தடுக்கும் வகையில் வீடுகளுக்கு வந்து பெற்றுச்செல்லும் திடக்கழிவு மேலாண்மை தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பதை வலியுறுத்தும் வகையில் திருச்சி மாநகராட்சி வார்டு எண் 23 செவ்ந்தி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில்  குப்பை கழிவுகளால் காட்சியளித்த…

கோரிக்கையை வலியுறுத்தி மோட்டார் வாகன ஆலோசகர்கள் சங்கத்தினர் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் நலச்சங்கம், திருச்சி மாவட்ட ராக் சிட்டி ஆட்டோ கன்சல்டிங் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் சேகர் தலைமையில் பல்வேறு சங்க நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து…

திருச்சி கலைக் காவிரியில் நடந்த குடும்ப விழா – எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ் பங்கேற்பு.

  திருச்சியில் மக்கள் குரலோனுடன் குடும்ப விழா நிகழ்ச்சி திருச்சி கலை காவிரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1985 முதல் 2005 பணியாற்றி நிகழ்ச்சி தொகுப்புகளுக்கு பின்னணி குரல் கொடுத்த வந்த மக்கள் குரலோன். DJ .கிறிஸ்டோபருக்கு அவருடன் கலைக் காவிரியில் பணியாற்றிய…

மறைந்த அதிமுக நிர்வாகி கலைமணி படத்திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கிய மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், குமார்,

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழக, மலைக்கோட்டை பகுதி கழகத்திற்குட்பட்ட, 9 வது வார்டு வட்ட பொருளாளர் கலைமணி கடந்த மாதம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். மறைந்த கலைமணி படத்திறப்பு விழா, திருச்சி சிந்தாமணி அருகே உள்ள பத்திரகாளி அம்மன்…