Month: June 2024

அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் 24ம் தேதி திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்:-

அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில், திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில், அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற…

நடிகர் விஜய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பாக ஆர்.கே.ராஜா தலைமையில் முதியோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது..

இன்று நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உறையூர் பாத்திமா நகரில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் முதியோர் நலக்காப்பகத்தில் உறையூர் மூர்த்தி ஏற்பாட்டில் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பாக ஆர்.கே.ராஜா…

மணல் கடத்தலை தடுக்க தவறிய 21 போலீசார் ஆயுதப் படைக்கு மாற்றம் – திருச்சி எஸ்.பி அதிரடி:-.

திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் காவல்துறை எல்லையிக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மற்றும் பங்குனி ஆற்றில் தினந்தோறும் இரவு நேரத்தில் மணல் மாபியா கும்பல் மணல் கொள்ளையடிப்பதாக பொதுமக்கள் கொள்ளிடம் போலீசாருக்கு தொடர்ந்து புகார் அளித்தள்ளனர். இந்நிலையில்…

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தினால் இதுவை 50 க்கு மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் பலர் பல்வேறு மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அதிமுக, , உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

ஸ்ரீரங்கம் கோவிலில் ஜேஷ்டா பிஷேகம் – காவிரியில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது:-

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரம் அன்று நடைபெறும் ஆனி திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் பெருமாளுக்கு நடத்தப்படும். மிகவும் விஷேசமான ஜேஷ்டா பிஷேகத்தின் போது இன்று காலை தங்ககுடம் மற்றும் வெள்ளி குடங்களில் காவிரி…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த யோகாதின நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகள்:-

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகாதின நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ் முதல்வர் முனைவர்.பிச்சைமணி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் முனைவர் ஜோதி வாழ்த்துறை…

தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பவர்கள் மீது குண்டாஸ் பாயும் – கலெக்டர் எச்சரிக்கை:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. திருநங்கைகள் முகாமில் கலந்து கொண்டு தங்களது பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்கி உரையாற்றினார்.…

ரோட்டரி சங்க பன்னாட்டு இயக்குனராக தமிழராகிய முருகானந்தம் தேர்வாகி இருப்பது தமிழருக்குக் கிடைத்த பெருமை – அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்:-

ரோட்டரி பன்னாட்டு இயக்குனராக தமிழனாகிய. முருகானந்தம் தேர்வாகி இருப்பது நமக்கு பெருமை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.உலக அளவில் இயங்கி வரும் ரோட்டரி சங்கங்களுக்கான பன்னாட்டு இயக்குனராக திருச்சியை சேர்ந்த எம்.முருகானந்தம் தேர்வாகியுள்ளார். தொழிலதிபரான இவர் எக்ஸெல்…

திருச்சி ஏர்போர்ட்டில் ரூபாய் 73.31 லட்சம் மதிப்பிலான 1074 கிராம் தங்கம் பறிமுதல்:-

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை சுங்கத்துறை அதிகாரிகள்…

சங்க இலக்கிய உரை வேறுபாட்டு களஞ்சியம் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடான சங்க இலக்கிய உரை வேறுபாட்டு களஞ்சிய என்ற நூல் வெளியீட்டு விழா திருச்சி சிங்காரத்தோப்பு அருகே உள்ள தமிழ் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் தமிழின் சங்க இலக்கியங்களை இன்றைய…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த ரத்ததான முகாம் – இந்தியா கூட்டணியினர் பங்கேற்பு.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி எம்.பி பிறந்த நாளை முன்னிட்டு திருவானைக்காவல், திருவரங்கம், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், நத்தர்ஷா பள்ளிவாசல், மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயம், ஜங்ஷன் வழி விடு முருகன் கோவில் ஆகிய வழிபாட்டு…

கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பல்வேறு வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

நீண்ட மாதங்களாக மாதாந்திர பராமரிப்பு உதவி தொகை கேட்டு விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாத உதவி தொகையை உடனே விடுவிக்க வேண்டும், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 3000 ஆகவும், மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மகளீர் காங்கிரஸ் மாவட்ட தலைவி ஷீலா செலஸ் ஏற்பாட்டில் முதியவர் களுக்கு காலை உணவு வழங்கினார்:-

காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி‌ தனது 54 வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.. அவரது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்கள் நடிகர்கள் தொழில் அதிபர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட…

திருச்சியில் பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு.

திருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 45) பால் வியாபாரம் செய்து வருவதுடன் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், அர்ஜுனன் என்ற இருவர் ராஜாவின் பெட்டி கடைக்கு வந்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.…

திருச்சிக்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச் சாமிக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு.

தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி கே.பழனிச்சாமி தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.திருச்சி வந்தடைந்த அவருக்கு, திருச்சி மாநகர்…

தற்போதைய செய்திகள்