முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு திருச்சியில் இன்று நடைபெற்றது. அப்பொழுது முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் கூறுகையில்..,

தமிழகத்தில் 2 கோடி சீர்மரபினர்கள் உள்ளிட்ட இந்தியாவின் 13 கோடி சீர்மரபினர் நலத் திட்டங்களுக்கு தனியாக நிதி உதவி 200 கோடி ஒதுக்கியும், நிதி ஆயோக் மூலம் முத்தரையர் உள்ளிட்ட 11பூர்வீக பழங்குடியின மக்களின் அமைப்பியல் குறித்த ஆய்வு செய்வதற்கு நிதி ஒதுக்கியும் அவர்கள் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை வெளியிட இருக்கும் மற்றும் ரோகினி அம்மையார் ஆணையத்தின் மூலம் மத்திய அரசின் 27 சதவீத ஓபிசி இட ஒதுக்கீட்டை அதிக பலன் அடைந்து சாதிகள், குறைவான பலன் அடைந்த சாதிகள், பலன் அடையாத சாதி மற்றும் டி என் டி என சரியான விகிதத்தில் பிரித்து முத்திரையர் உட்பிரிவுகளான முத்துராஜா, முத்திரியர், வலையர், அம்பலக்காரர் ஆகிய ஜாதிகளை ஒரே பிரிவில் சேர்த்து கொடுத்து நியாயமான சமூகநீதியை நிலைநாட்ட இருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமீத் ஷா அவர்களுக்கும் ஒரு கோடி முத்தரையர் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான வகுப்புவாரி தொகுப்பு சம இடப்பங்கீட்டை தமிழக அரசை வழங்க கோரியும், போலி வன்னியர்களின் சாதி சான்றிதழை ரத்து செய்யக்கோரியும், வலையர், அம்பலக்காரர், சேர்வை உள்பட புனரமைப்பு வாரியத்தை தமிழக அரசை உடனே அமல்படுத்த கோரியும், மேலும் சீர்மரப்பினர் ஆணையம் அமைத்து தருகிறேன் என கூறி முதல்வர் இதுவரை அமைக்கவில்லை, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்திக்க கூட எங்களுக்கு வாய்ப்பு தரவில்லை, மேலும் எங்கள் கோரிக்கை நிறைவேற்ற வில்லை என்றால் வருகிற 22-ம்தேதி சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *