3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும் அதுவரை விவசாயிகள் தேசிய மயமான வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகளுடன்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில துணை தலைவர் மேகராஜன், முன்னிலையில் கடந்த மாதம் 12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள் பல்வேறு கட்ட நூதன உண்ணாவிரத போராட்டங்கள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 35-வது நாளான இன்று விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பிரதமர் மோடி ஏமாற்றி விட்டதாக கூறி விவசாயிகள் தலை, உடல் முழுவதும் பட்டை போட்டு நூதன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக இந்திய பிரதமர் மோடியை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு அவமதிப்பதாக கூறி பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு காணப்பட்டது.