கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கஞ்சா போதை மாத்திரை உள்ளிட்டவற்றை விற்கும் கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேர ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபடும் தனிப்படை போலீசார் தொடர்ந்து சமூக விரோத கும்பலை கைது செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செங்கோட கவுண்டர் புதூர் பிரிவு அருகே சூலூர் காவல் ஆய்வாளர் மாதையின் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் ஒன்றை தணிக்கை செய்த போது மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. சந்தேகம் அடைந்த போலீசார் அதனை பிரித்துப் பார்த்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தன. இந்த நிலையில் சட்ட விரோதமாக அக்கா விற்பனை செய்ய காரில் புகையிலை பொருட்களை நடத்திய ராஜஸ்தானை சேர்ந்த கன்பட்ராம் (25), தினேஷ் (20), ஹட்மட்டா ராம் (32) மற்றும் தமிழகத்தைச் சார்ந்த பன்னீர்செல்வம் (27), சரவணகுமார் (47) உள்ளிட்ட ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 41 ஆயிரம் மதிப்புள்ள 78 கிலோ கூல் லிப், 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 28 கிலோ ஹான்ஸ், ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 114 கிலோ விமல், 13 ஆயிரம் மதிப்புள்ள 36 கிலோ கணேஷ், 14,000 ரூபாய் மதிப்புள்ள 46 கிலோ ஸ்வாக், 30,000 ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ டொபாக்கோ பறிமுதல் செய்த போலிஸார் TN 57 BK 6190 என்ற டாட்டா ஹாரியர் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மொத்தம் தனிப்படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு அரை டன் . நான்கு லட்சத்து நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த தனிப்படை போலிஸார் எதிர்வரும் காலங்களில் குட்கா விற்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *