திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி உயர்நிலைப்பள்ளி கட்டிடம் 6 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ஆன கட்டுமான பணிக்கு தமிழக நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு பயன்படுத்தக் கூடிய Battery Operated Vehicle வாகனம் தலா ரூ .4.20 லட்சம் வீதம் 6 வாகனங்களை தொடங்கி வைத்தார். மேலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களது குழந்தைகளின் பள்ளி படிப்பிற்கு . 1 ம் வகுப்பு முதல் 6 ம் வகுப்பு வரை பயிலும் 6 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை என தலா ரூ .15,000 / -ம் மற்றும் 7 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் 24 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை தலா ரூ .18.000 / – வீதம் மொத்தம் 30 மாணவர்களின் பள்ளிக் கல்வி படிப்பு செலவுக்கு மொத்தம் ரூ .5,22.000 / -த்தை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி நகர் பகுதியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூபாய் 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட. நகர் புற நலவாழ்வு மையத்தை திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் வைத்தியநாதன் நிதி குழு தலைவர் முத்துச்செல்வம் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்