அதிமுக முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.நேற்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மீது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு கடந்த 3ஆம் தேதி புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் அதிமுகவில் கடந்த 23 வருடங்களாக நிரந்தர உறுப்பினராக உள்ளேன். நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். நிலோபர் கபில் அவர்கள் அமைச்சராக இருந்த பொழுது அவர் அவருக்கு உதவியாளராகவும் நான் பணியாற்றியுள்ளேன். இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்ட போது அவர் தேர்தல் செலவுக்காக என்னிடம் பணம் கேட்டார். இதையடுத்து தெரிந்தவர்கள் இடமும், நண்பர்களிடமும் பணத்தை வாங்கி அவரிடம் 80 லட்சம் கொடுத்தேன் இந்நிலையில் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக அவர் சொன்னதின் பேரில் சிலர் காசோலை வாயிலாக என்னிடம் பணம் கொடுத்தனர். அந்த பணம் நான் அவரிடம் ஒப்படைத்தேன் இது போன்று பல நபர்களிடம் இருந்து சுமார் 6 கோடி ரூபாய் அளவிற்கு நான் பணத்தை வாங்கிக் கொடுத்துளேன். ஆனால் அவர் சொன்னபடி வேலை வாங்கி கொடுக்க முடியவில்லை மேலும் பணம் கொடுத்தவர்கள் என்னிடம் பணத்தை திருப்பி கேட்க ஆரம்பித்து விட்டனர். இதற்கு முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் தன்னுடைய சொத்தை விற்று பணத்தை திருப்பித் தருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு என்னுடைய வீட்டிற்கு வந்து என்னை மிரட்டுகிறார்கள். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து அவரிடம் இருந்து பணத்தை மீட்டுத்தருமாறு வேண்டுவதாக அவர் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த புகாரில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *