3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும் அதுவரை விவசாயிகள் தேசிய மயமான வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகளுடன்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில துணை தலைவர்கள் மேகராஜன், கரூர் தட்சிணாமூர்த்தி, சிறுகாம்பூர் பரமசிவம், மாநில செயலாளர்கள் ஜான் மெல்கியராஜ், லால்குடி தியாகு, மாநில துணை சட்ட ஆலோசகர் முத்துசாமி, மாநில செய்தி தொடர்பாளர்கள் தீராம்பாளையம் பிரேம்குமார், வரப்பிரஹாஸ் ஆகியோர் முன்னிலையில்
கடந்த மாதம் 12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 34-வது நாளான இன்று விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பிரதமர் மோடி ஐயா விவசாயிகள் தலையில் குல்லா மாட்டி விட்டதாக கூறி விவசாயிகள் தங்கள் தலையில் குல்லா மாட்டி கொண்டு நூதன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.