திருச்சி மத்திய சிறைச்சாலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி :

1517 தண்டனை பெற்ற சிறைவாசிகள் இங்கு உள்ளனர் – ஐ.டி தொழிற்பயிற்சி இந்தியாவிலேயே இரண்டு சிறைச்சாலைகளில் மட்டும்தான் உள்ளது ஒன்று ராஜஸ்தான் ஜெய்ப்பூர், அடுத்தபடியாக நமது திருச்சிராப்பள்ளி சிறைச்சாலை,இங்கு படித்து செல்வோர்களுக்கு ஐ.சி சான்றிதழ் வழங்கப்படுகிறது – அதே போல் சிறைவாசிகள் 10,12 போன்ற வகுப்புகள் தேர்வெழுத அனுமதிக்கப்படுகின்றனர்.

ஏழு பேரில் ரவிசந்திரன் என்பவரது தாயார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பரவல் வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வேண்டுகோள் : இது குறித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் கலந்து பேசி பரிசீலனை செய்யப்படும். சிறையில் உள்ள கைதிகளுக்கு முழுமையான மருத்துவ வசதிகள் கொடுக்கப்பட்டு வருகிறது – சிறை கைதிகளின் பாதுகாப்பில் அக்கறை உள்ள அரசாக இந்த அரசு உள்ளது.

திருச்சி சிறப்பு முகாமில் தண்டனை காலம் முடிந்தும் தங்க வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிற கேள்விக்கு – பாஸ்போர்ட்,வெளி நாடுகளுக்கு சென்றால் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கும் இங்கே இருக்கிறது இது போன்ற காரணங்களால் தான் அவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளவர்களை விடுவிப்பதற்கு அறிவித்துளார் முதல்வர் – ஆனால் வெடிகுண்டு வழக்கு,தேச துரோக வழக்கு, கொடும் குற்றம் இப்படி அதில் பல்வேறு நிபந்தனைகள் உள்ளது,இது போன்றவர்களை ஆய்வு செய்து வருகிறோம்,இது போன்றவர்களை களைத்து விட்டு பட்டியலை தயாரித்து வருகிறோம். ஏழு பேர் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் மிக உறுதியாக உள்ளார் – இந்த அரசு முழு முயற்சி எடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *