இந்திய அரசு , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் திருச்சி மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் 75 வது சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவினை முன்னிட்டு மாவட்ட , மாநில மற்றும் தேசிய அளவில் இளையோர் சக்தியை மேம்படுத்தவும் மற்றும் வலியுறுத்தும் விதமாகவும் திருச்சியில் வரும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் இளையோர் திருவிழா நடைபெறவுள்ளது . அதையொட்டி கீழ்க்கண்ட போட்டிகள் நடைபெற உள்ளது .

 போட்டிகள் விபரம் : இளம் கலைஞர் ( ஓவியம் ) , இளம் எழுத்தாளர் ( கவிதை ) , போட்டோகிராபி ( புகைப்படம் ) , பேச்சுப்போட்டி . இளையோர் கலைவிழா , மாவட்ட இளையோர் கருத்தரங்கம் . போட்டிக்கான விதிமுறைகள் : போட்டிகளில் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த 01.04.2022 அன்று 15 முதல் 29 வயதிற்குட்பட்ட இளையோர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் . மேற்கண்ட போட்டிகளில் வரிசை எண் 1 முதல் 4 வரை , ஒரு நபர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும் .

போட்டிகளில் வெற்றி பெறும் இளையோர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளும் வழங்கப்படும் . மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிகளுக்கும் , மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்கள் . பங்கேற்க விருப்பமுள்ள இளையோர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகலை இணைத்து

மாவட்ட இளையோர் அலுவலர் , நேரு யுவகேந்திரா . ரேஸ்கோர்ஸ் ரோடு , காஜாமலை , திருச்சி- 620 023 என்ற அலுவலக முகவரிக்கு வருகின்ற 06.10.2022 வியாழக்கிழமைக்குள் அனுப்பி வைக்க வேண்டும் . மேலும் விபரங்களுக்கு மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்தை நேரிலோ , அல்லது 9486753795, 6381785164 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் . போட்டி நடைபெறும் இடம் போட்டியாளர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும் . மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *