திருச்சி மாநகர் பகுதிகளில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ் காலனியில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி 2021-2022 ம் ஆண்டின் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 11.55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக்கடையை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து , மாநகராட்சிகுட்பட்ட 53 ஆவது வார்டு குதுப்பா பள்ளம் பகுதியில் சீர்மிகு நகரத்திட்டதின் கீழ் ரூபாய் 2.50 கோடி மதிப்பிட்டில் கட்டப்படவுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையக் கட்டட கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து , திட்ட வரைபடத்தினைப் பார்வையிட்டு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார் .
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், கதிரவன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாமன்ற உறுப்பினர்கள், PRP.மஞ்சுளா தேவி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.