திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிபவர் மணிவேல் – இவர் பச்சைமலை பகுதி வண்ணாடு ஊராட்சியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடுகள் கட்ட தேர்வான பயனாளிகளிடம் ரூ. 3000 வீதம் ஐந்து பயனாளிகளிடம் ரூ.15000ம் லஞ்சம் பெறும் வீடியோ காட்சிகள் நேற்று மாலை முதல் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் பயனாளியிடம் நான் இடத்தை பார்வையிட வரும்பொழுது மீதி பணத்தை தர வேண்டும் என்று கறாராக கூறும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன – ஆனால் அரசு உயர் அதிகாரிகளோ, லஞ்ச ஒழிப்பு துறையோ இது குறித்து எந்த விசாரனையும் மேற்கொள்ளவில்லை என்று அவ்வூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த 2 மாதமாக மலை வாழ் மக்களிடம் இருந்து அதிகம் லஞ்சம் பெறுவதாகவும் – பணம் கொடுக்காதவர்களை திட்டமிட்டு அலைக்களிப்பதாகவும் பொது மக்கள் புகார்.