திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெங்கடாஜபுரம் பகுதி தெற்கு தெருவை சோ்ந்தவா்கள் தனிஸ்லாஸ் மற்றும் அரோக்கியசாமி இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி இவர்கள் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த 2014 ஏப்ரல் மாதம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஆரோக்கியசாமி , அவரது மகன் சசிகுமார், அவரது மனைவி தனமேரி ஆகிய மூவரும் சேர்ந்து தனிஸ்லாஸ் மற்றும் அவரது மகனான நெப்போலியன் ஆகியோரை குத்துக் கோல் கொண்டு குத்தியதில் சம்பவ இடத்தில் இறந்துவிட்டனர். இதுக்குறித்து தனிஸ்லாஸின் மகன் சாமிதுரை (லேட்) கடந்த 2014ல் கல்லக்குடி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து. அந்த வழக்கானது திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திருச்சி நீதிமன்றத்தில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல் அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதங்களை அடிப்படையாக கொண்டும், சாட்சிகளை விசாரணை செய்தும், இந்த வழக்கில் தனிஸ்லாஸ் மற்றும் அவரது மகன் நெப்போலியன் இருவரும் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ஆரோக்கியசாமி மகன் சசிக்குமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இரண்டாவது குற்றவாளியான ஆரோக்கிய சாமியின் மனைவி தனமேரிக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், 5ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மூன்றாவது குற்றவாளியான ஆரோக்கியசாமிக்கு 1 ஆயுள் தண்டனையும், 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து சசிகுமார், ஆரோக்கியசாமி ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தனமேரி திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்