வயலூர் சாலை புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் நல சங்கம் சார்பாக இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு தலைவர் முருகேசன் தலைமையில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-
காந்தி மார்க்கெட், உறையூர் மீன் மார்க்கெட், உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள வியாபாரிகள் அனைவரும் கொரோனா காலமாக இருந்த போதிலும் கடை வாடகை, கடை தொழில் வரி, பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட வரிகளை போதிய வருமானம் இல்லாத காலத்திலும் மாநகராட்சிக்கு செலுத்தி வருகிறோம். இந்த நிலையில் கொரோனா தாக்கத்தினால் வரிகளை செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து கொரோனா தொற்றுநோய் வந்ததற்கு பிறகு எங்கள் பகுதி வியாபாரிகள் கடைகளுக்கு அருகிலேயே தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் ,மினி ஆட்டோ களில் காய்கறிகள் பழங்கள், மளிகை பொருட்கள் தொடர்ந்து விற்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநகராட்சி எல்லைக்குட்பட்ட உய்யகொண்டான் திருமலை ஆற்றுப்பாலம் வண்ணாரப்பேட்டை பூங்கா அருகில் புதிதாக வாரச்சந்தை தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் எங்கள் பகுதி வியாபாரிகள் அனைவரும் பெரும் இழப்பையும் மன உளைச்சலையும் சந்தித்து வருகிறோம். ஆகவே உய்ய கொண்டான் திருமலை மற்றும் வண்ணாரப்பேட்டை பூங்கா அருகில் நடைபெறும் வாரச்சந்தையை நடத்தக் அனுமதிக்க கூடாது என பலமுறை மனு கொடுத்து இருக்கிறோம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை. இந்த முறை கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தாக தெரிவித்தார்.