67வது ரயில்வே வார விழாவை முன்னிட்டு பொன்மலை ரயில்வே திருமண மண்டபத்தில் 09.07. 22, காலை 9.30 மணியிருந்து மாலை 5.00 மணி வரை ரயில் சம்பந்தப்பட்ட அஞ்சல் தலை, நாணயங்கள் மற்றும் ரயில் மாதிரிகள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியினை பொன்மலை பனிமலை முதன்மை மேலாளர் ஷ்யாம தார்ராம் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக இந்தியன் ரயில்வே ஆணையம் மெக்கானிக் பிரிவு மேனாள் தாசாரதி பங்கேற்றார்.
தாய் டிரெயின் பகுதியினை மேனாள் முதன்மை மேலாளர் ராஜீவும், பழைய நீராவி என்ஜின் பகுதியினை மண்டல பண்டக சாலை மேனாள் மேலாளர் மண்டல ரயில்வே பயிற்சி மைய முதல்வர் கோபாலனும் ரயில்வே சம்பந்தமான புத்தகங்களை உமாசங்கரும், ரயில் குறித்த தபால் தலைகள் பகுதியினை தமிழ்நாடு குடிநீர் வாரிய மேனாள் முதன்மை பொறியாளர் ரகுநாத்தும், புல்லட் ரயில் பகுதியினை பொன்மலை பணிமனை மேனாள் உதவி மேலாளர் வைகுண்ட மூர்த்தியும் ரயில் பேரிடர் மேலாண்மை பகுதியினை சன்மார் லிமிடெட் மேனாள் இயக்குனர் வெங்கடேசனும் ரயில் சேசிங் பகுதியினை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமாரும், பாம்பன் மாடல் பகுதியினை நவசக்தி இன்ஜினியரிங் உரிமையாளர் கீர்த்தி வாசன் திறந்து வைத்தார்கள்.கண்காட்சியில் 2500க்கும் மேற்பட்ட உலகின் பல்வேறு நாட்டின் அஞ்சல் தலைகள், நாணயங்கள், பழமையான ஹெரிடேஜ் மாதிரி ரயில்வே இன்ஜின்கள், ரயில்வே பாடல்கள், ரயில் விபத்து பேரிடர் மேலாண்மை மாதிரி வடிவமைப்பு , உலகின் பல்வேறு மாதிரி கோச்சுகள், வேகன்கள், டீசல் இன்ஜின்கள், மின்சார ரயில்கள், புல்லட் டிரெயின்கள் உள்ளிட்டவற்றை அவிநாசி ஜலால் காட்சிப்படுத்தி விளக்கினார்.கண்காட்சியில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம் , சாரண, சாரணியின் தலைவர் முருகானந்தம், ராஜமோகன், மூர்த்தி, ரவி , கணேஷ், சந்தோஷ், ரமேஷ், ரயில்வே பள்ளி மற்றும் சாரண, சாரணிகள், பழைய கலைப் பொருள் ஆர்வலர்கள் , பள்ளி மாணவர்கள் , மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துக் கொண்டார்கள்