தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்துள்ள ஆரியபடைவீடு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்-தீபா தம்பதியினர். இவர்களது பெண் குழந்தை வர்ஷிகா.கடந்த 2020ஆம் ஆண்டு இவர்கள் தங்களது குழந்தையுடன் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை வர்ஷிகாவின் பாதம் துண்டிக்கப்பட்டது. உடனடியாக துண்டான பாதத்தை எடுத்து அங்கிருந்து திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சுமார் 5மணி நேர அதிநவீன அறுவை சிகிச்சைக்கு பிறகு துண்டான பாகத்தை மருத்துவ குழுவினர் சேர்த்து வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இன்று தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினம் என்பதால் அந்த குழந்தை அறுவை சிகிச்சைக்கு பிறகு சுமார் ஒரு வருட காலம் முடிந்து தற்போது இயல்பாக நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் மருத்துவர் ஸ்கந்தா, மயக்கவியல் நிபுணர் செந்தில்குமார், நுண்ணறிவை சிகிச்சை நம்புனர் முரளிதரன், மற்றும் மருத்துவர் திவ்யா ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர் செங்குட்டுவன் மருத்துவர்களின் செயல்பாடு குறித்து பேசினார்.
உலக அளவில் மிக குறைவான வயது உடைய குழந்தையின் துண்டிக்கப்பட்ட பாதத்தை இணைத்து அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த சாதனையை காவேரி மருத்துவமனை செய்துள்ளது. அதற்கு முன் உலக நாடுகளில் 3வயது குழந்தைக்கு 12 வயது குழந்தைக்கு இது போன்ற அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.எனவே விபத்து ஏற்பட்டு உடல் உறுப்புகள் துண்டிக்கப்படும் சமயத்தில் பிளாஸ்டிக் பையில் வைத்து ஐஸ்பெட்டுக்குள் வைத்து இரண்டிலிருந்து மூன்று மணி நேரத்திற்குள்ளாக மருத்துவமனைக்கு துண்டிக்கப்பட்ட உடல் உறுப்பை விரைவாக கொண்டு வந்து சேர்த்தால் அதை மீண்டும் உடல் உறுப்புடன் இணைத்து மீண்டும் செயல்பட வைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.