தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டியது தொடர்ந்து , 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் முக்கொம்புக்கு மேலனைக்கு வந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால். காவிரி கரையோர கிராமங்களில் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சலவைத்தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் , நீர்வரத்து விவரத்தினை அவ்வப்போது தெரிந்து கொள்ளுமாறும் தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், மேலும் காவிரி நீர் நிலையில் ஆற்றில் குளிக்கவோ , நீந்தவோ , மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்குவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை .
பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ ” செல்பி ” ( Selfie ) எடுக்க அனுமதி இல்லை . என திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதன் ஒரு பகுதியாக காவேரி ஆற்றில் கறைகளை தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் பொதுமக்கள் குளிப்பதற்கு, திதி கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கீதாபுரம் தடுப்பணை, வீரேஸ்வரம் அதேபோல் கொள்ளிட ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் அப்பகுதியில் உள்ள வடக்கு வாசல் கொள்ளிடக்கரை செக்போஸ்ட் கொள்ளிடக்கரை ஆகிய பகுதிகளில் தடை விதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.