திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இம்முகாமில் இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதை போல் பல்வேறு வழக்குகளை தொடர்புடைய ஈழத் தமிழர்கள் சுமார் 108 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 200-க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை (NIA) போலீஸ் எஸ்.பி தர்மராஜ் தலைமையில் இன்று அதிகாலை 5.00 மணி முதல் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறப்பு முகாமில் இருப்பவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சிறப்பு முகாமிற்கு வந்த திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் விசாரணையின் விவரங்களை கேட்டு அறிந்தார்.
மேலும் சிறப்பு முகாமில் இருப்பவர்களின் நகைகளின் மதிப்பை அறிவதற்காக நகை மதிப்பீட்டாளர் வரவழைக்கப்பட்டு நகைகள் மதிப்பிடப்பட்டது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஹெராயின் பிடிபட்ட வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையினர் சிறப்பு முகாமில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.