44 – வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது .
இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டியில் உலகின் முதல் நிலை கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் 188 நாடுகளை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
சென்னையில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, தமிழ்நாட்டில் முதன்முதலாக திருச்சி மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் இருந்து
தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் மற்றும் பாஸ்கெட் அசோசியேஷனை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்ற
44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு ஸ்கேட்டிங் ஓட்டத்தினை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் மற்றும் பேஸ்கெட் அசோசியேஷன் செயலாளர் பூஞ்சோலை செய்திருந்தார்.