திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடந்தது .துணை மேயர் திவ்யா முன்னிலை வகித்தார் .கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஜெய நிர்மலா மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டு பேசினர். கவுன்சிலர்கள் பேசும்போது பாதாள சாக்கடை திட்டம், சாலை வசதி, கழிவுநீர் வடிகால் வாய்க்கால், குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.
இதற்கு பதிலளித்து மேயர் அன்பழகன் பேசியதாவது. :திருச்சி மாநகரில் மழை காலத்திற்கு முன்பு அனைத்து வடிகால் வாய்க்கால்களும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைத்திட வழிவகை செய்யப்படும். மாநகரிலுள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும். பாதாள சாக்கடை குழாய் வெடித்த விவகாரத்தில் கேஸ் நாப் பழுதடைந்து இந்த சம்பவம் நடந்துள்ளது .அந்த பணியும் துரிதமாக முடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மேயர் பேசினார்