தமிழக அரசு அறிவித்துள்ள போதைப் பொருட்கள் இல்லா தமிழகம் (DRIVE AGAINST DRUGS) என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருச்சி கன்டோன்மென்ட் மாநகர காவல்துறை, செவன்த் டே அட்வென்டிஸ்ட் பள்ளி, தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு, மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியோர் இணைந்து போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மனித சங்கிலியை நடத்தியது.
போதைப்பொருட்கள் இல்லா தமிழகம் உருவாக ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்ற உறுதிமொழியை பள்ளி மாணவ மாணவிகள், சேவை சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் காவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
இந் நிகழ்வில் கண்டோன்மெண்ட் சரக உதவி ஆணையர் முனைவர் அஜய் தங்கம் தலைமை தாங்கினார், மேலும் பள்ளி முதல்வர் வில்சன் டானியல், காவல் ஆய்வாளர் சேரன், உதவி ஆய்வாளர் மோகன், தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பால் குணா லோகநாத், கூட்டமைப்பின் நிர்வாகிகள் பாத்திமா கண்ணன்,
சாலை பாதுகாப்பு நல அமைப்பின் தலைவர் ஐயாரப்பன், காமகோடி சுந்தர், ஷர்புதீன், வழக்கறிஞர் இளங்கோ, தண்ணீர் அமைப்பின் RK ராஜா, இளங்கனல் அமைப்பின் தலைவர் ரஞ்சித், ராயல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் இர்ஷாத் அகமத், மற்றும் நிர்வாகிகள், போக்குவரத்து காவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.