திருவெறும்பூர் அருகே திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற கூட்ஸ் ரயில் தண்டவாளத்தில் கிடந்த திராவிடர் கழக கட்சியின் திருவெறும்பூர் நகர தலைவரின் உடலை பொன்மலை ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி கூட்ஸ் ரயில் சென்றது திருவெறும்பூர் அருகே உள்ள குமரேசபுரம் அருகே வந்த பொழுது ரயில் முன் வாலிபர் ஒருவர் ரயில்வே பாதையில் தலையை வைத்து தற்கொலை செய்து கொள்வதற்காக படுத்து உள்ளார்.கூட்ஸ் ரயில் டிரைவர் எவ்வளவோ எச்சரித்தும் சத்தமிட்டும் கேட்காமல் இருந்துள்ளார்.இந்த நிலையில் ரயிலை நிறுத்த முடியாமல் அந்த வாலிபரின் மீது கூட்ஸ் ரயில் ஏறி 20 மீட்டர் தூரம் தள்ளி போய் நின்றது.சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.இச்ச சம்பவம் குறித்து ரயில் டிரைவர் உடனடியாக பொன்மலை ரயில்வே போலீசருக்கு தகவல் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்மலை ரயில்வே போலீசார் ரயில் முன் பாய்ந்தது தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை செய்ததில் இறந்தவர் திருவெறும்பூர் அருகே உள்ள நடராஜபுரம் ஊராட்சி ஜெயலட்சுமி நகரில் வசித்து வந்த பச்சையப்பன் என்பவரின் மகன் சுரேஷ் வயது 40 என்பதும் இவர் திராவிடர் கழக கட்சியின் திருவெறும்பூர் நகர தலைவராக இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது மனைவி சாந்தி கூலித்தொழிலாளி மகன்கள் அன்புச்செல்வன்(13) இவன் ஒன்பதாவது வகுப்பும் அறிவுச் செல்வன் (15) 11-வது வகுப்பும் பாய்லர் பிளாண்ட் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட சுரேஷ் பெல் நிறுவன கணேசா பகுதியில் பஞ்சர் கடை வைத்து நடத்தியுள்ளார் சமீபகாலமாக கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று காலை தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது செல்போனில் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள் என்னை மன்னித்துவிடு என்று மனைவிக்கு பேசி அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது தற்கொலைக்கு கடன் பிரச்சினை காரணமா? வேறு ஏதும் பிரச்சினைகள் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.