திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளிக்க வந்திருந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பிரபு தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் கடந்த 13 ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடி வைத்திருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவ சிலையை திறந்து வைக்க கோரியும், அதேபோல் திருச்சி மாநகரம் முழுவதும் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு அந்தப் பணிகள் முடிந்தும் பெரும்பாலான சாலைகள் மோசமான சாலைகளாகவும், குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சாலை பணிகளை விரைந்து முடித்திட வலியுறுத்தியும்.
திருச்சி துறையூர் பச்சை மலையை சுற்றியுள்ள பல கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆன சாலை வசதி குடிநீர் வசதி கழிப்பறை வசதி கூட இல்லாமல் நீண்ட காலமாக தவித்து வருகின்றனர் பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தியும்.
அதேபோல் திருச்சி மத்திய சிறை சாலை சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரிந்து பல ஆண்டுகள் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர். அவர்களது வழக்குகளை விரைந்து முடித்து அவர்கள் தம் குடும்பத்தினருடன் இருக்க வழிவகை செய்ய வேண்டும் 9 உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் அளித்தனர். இன்னும் 15 தினங்களுக்குள் இந்தக் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் பொதுமக்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சித் தலைவரை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என நாம் தமிழர் கட்சியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பிரபு தெரிவித்தார்..