தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு அனைத்து விவசாயிகளுக்கும் ரூபாய் 6 ஆயிரம் வருடம் தோறும் தறுவதாக தெரிவித்தது. ஆனால் தற்பொழுது அந்த 6000 ரூபாய் பெறுவதற்கான பல்வேறு விதிமுறைகளை வகுக்கப்பட்டுள்ளது.
அதில் யார் பேரில் பட்டா உள்ளதோ அவருக்குத்தான் வருடத்திற்கு ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும் – மேலும் குத்தகை விவசாயிகள் தந்தை பெயர் பட்டா உள்ள விவசாய நிலங்கள் கோயில் நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு 6000 வழங்கப்படாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை திருத்தி அமைத்து அனைத்து விவசாயிகளுக்கும் வருடத்திற்கு 6000 வழங்க வேண்டும்,மேலும் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.